அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு திராவிட கட்சிகளே காரணம் – பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு திராவிடக் கட்சிகளே காரணம் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ராமசாமி படையாட்சியின் 99வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்த பின், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் மிகவும் குறைந்துள்ளதற்கு தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளியை திறந்து மக்களுக்கு துரோகம் செய்தது திமுக வும் அதிமுகவும் தான் எனக் கூறிய அவர், நவோதயா பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன