Advertisement

அரசியலில் இணைந்து செயல்படுவது குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்

அரசியலில் இணைந்து செயல்படுவது குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம்தான் முடிவு செய்யும் என்று பதிலளித்தார். தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ள கமலுக்கு தமது வாழ்த்துகளையும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், ரஜினி கூறிய கருத்தை வழிமொழிவதாக கூறினார். ரஜினி வழி வேறு தமது வழி வேறு என்றும் அவர் விளக்கம் அளித்தார். ரஜினி ஆன்மீக அரசியலில் ஈடுபடுவதாகவும் தமது பாதை பகுத்தறிவின் பாதை என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்

இதனிடையே, நேற்று மாலை கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்ற அனிமேஷன் திரைப்பட தொடக்க விழாவில் இருவரும் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ திரைப்படம் குறித்த அறிமுக வீடியோவை நடிகர் கமலஹாசன், வெளியிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன