Advertisement

அம்மை நோயைத் தடுக்க கிராம மக்கள் வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அம்மை நோய் வராமல் தடுக்க பச்சை இலைகளில் படையலிட்டு ஆற்றில் விடும் வழிபாடு நடைபெற்றது. மேடுப்பள்ளி கிராம மக்கள் வீடுகளை சுத்தப்படுத்தி பச்சை இலையில் பல்வேறு உணவு வகைகளை கடவுளுக்குப் படையலிட்டு பூசை செய்தனர்.

பின்னர் அந்த படையல்களை ஊர்க்கோவிலுக்கு ஊர்வலமாக பெண்கள் கொண்டு சென்றனர். அப்போது மாரியம்மன், சாக்கியம்மன், கௌமாரம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு படையல்கள் இலைகளுடன் ஆற்றில் விடப்பட்டன. இந்த படையல்களின் மூலம் அம்மை நோய் கிராம மக்களை தாக்காமல் ஆற்று நீரின் வழியாக விரட்டப்படுவதாக நம்பப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன