Advertisement
Advertisement

அம்பு-சின்னத்தை வென்றார் நிதிஷ் குமார்

நிதிஷ் குமார் தலைமையிலான அணியே உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என்றும், அம்புச் சின்னத்தைப் பயன்படுத்தும் உரிமையும் அவர்களுக்கே உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவு ஏற்பட்டதை அடுத்து, முதலமைச்சர் நிதீஷ்குமார் அணியினரும், கட்சியை நிறுவிய சரத்யாதவ் தரப்பினரும் கட்சியின் அம்புச் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இதில், நிதீஷ்குமார் தரப்பிற்கு மூத்த வழக்கறிஞர் கோபால் சிங்கும், சரத்யாதவ் தரப்பிற்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞரான கபில் சிபலும் ஆஜராகி வாதிட்டு வந்தனர்.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்துள்ளது. நிதீஷ்குமார் தலைமையிலான பிரிவே ஐக்கிய ஜனதா தளம் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதாகவும், கட்சியின் அம்புச் சின்னத்தை பயன்படுத்தும் உரிமையும் அந்த அணியினருக்கே உரியது என்றும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய ஜனதா தளம், பீகாரில் மட்டும் செயல்படக் கூடிய மாநிலக் கட்சியாக மட்டுமே அங்கீகரிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன