Advertisement

அம்பத்தூரில் மர்ம அட்டைப்பெட்டிகள் கடத்தல் செய்த இனோவா காரை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை

சென்னை அருகே அம்பத்தூரில் மர்ம அட்டைப்பெட்டிகளைக் கடத்தப் பயன்பட்ட இனோவா காரைக் கைப்பற்றிய போலீசார், உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

வி.ஜி.என் காலனியில் வந்து நின்ற வெள்ளை நிற இனோவா காரில் இருந்து, சந்தேகத்திற்கு உரிய வகையில் 5 அட்டைப்பெட்டிகள் மற்றொரு காருக்கு மாற்றப்பட்டதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினரைப் பார்த்ததும், அட்டைப்பெட்டிகள் ஏற்றப்பட்ட கார் அங்கிருந்து தப்பியது. அட்டைப் பெட்டிகளை எடுத்து வர பயன்படுத்தப்பட்ட இனோவா காரை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் காரின் உரிமையாளர் முரளி என்பவரையும் கைது செய்தனர். மர்ம அட்டைப்பெட்டிகளுடன் தப்பிய காரை போலீசார் தேடி வருகின்றனர். அட்டைப் பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டவை ஆவணங்களா, ரூபாய் நோட்டுகளா, என்பது குறித்தும், அந்த அட்டைப் பெட்டிகள் யாருக்கு சொந்தமானது என்றும் கார் உரிமையாளர் முரளியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன