அமெரிக்க ஆராய்ச்சி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு

வேண்டாம் என கூறுவது எப்போதும் ஒரே அர்த்தத்தை தராது என்று கூறியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், அமெரிக்க ஆராய்ச்சி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து, பீப்ளி லைவ் திரைப்பட இணை இயக்குநரை விடுதலை செய்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவியை, பீப்ளி லைவ் திரைப்படத்தின் இணை இயக்குநர் மஹ்மூத் பரூக்கி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், விரைவு நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து, மஹ்மூத் பரூக்கி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், பலாத்காரம் செய்தபோது, அமெரிக்க ஆராய்ச்சி மாணவி வலுவான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளது.

பரூக்கியும், அமெரிக்க மாணவியும் பலமுறை முத்தங்களை பகிர்ந்துள்ளதையும், இருவரும் பலமுறை கட்டியணைத்துக் கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், பரூக்கி பாலியல் பலாத்காரம் செய்தபோது, மாணவி பெயரளவுக்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், மாணவியின் அனுமதியின் பேரிலேயே பாலுறவு நடந்துள்ளதாக கூறியுள்ள நீதிமன்றம், பரூக்கியை பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன