அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் திடீரெனப் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

ஃபீனிக்சின், வறட்சி பாதித்திருந்த டோன்டோ வனப்பகுதியில் வெர்தே நதியில் பாய்ந்த நீரைக் கண்டவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீந்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெள்ளம் கரைபுரண்டு வந்தது.

சேறு, சகதியோடு வழியில் இருந்த மரங்களை முறித்துக்கொண்டு பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி அங்கிருந்தவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், மரக்கிளைகளைப் பிடித்துக் கொண்டு உயிர்பிழைத்தவர்கள் மீட்கப்பட்டனர்.

காணாமல் போன மேலும் ஒரு சிறுவன் உள்பட சிலரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடிவருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன