அமெரிக்காவில் கண்ணெதிரே பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட மர்மநபர் – 5 பேர் உயிரிழப்பு

வட கலிபோர்னியாவில் உள்ள tehana county-ல் உள்ளூர் நேரப்படி நேற்று காலை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, சரக்கு வேனில் வந்த ஒருவன், கண்ணில் பார்த்தவர்களையெல்லாம் துப்பாக்கியால் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொண்டே சென்றான்.

சுமார் 5 இடங்களில் அவன் நடத்திய தாக்குதலில், பலர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். தகவல் அறிந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவனை சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அவன் பயன்படுத்திய சரக்கு வாகனம் திருடப்பட்டது என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
துப்பாக்கியுடன் அந்த நபர் அலைவதைக் கண்டதும், அருகில் இருந்த பள்ளி ஆசிரியர்கள், சின்னஞ்சிறு குழந்தைகளை பத்திரமாக பள்ளிக்குள் அழைத்துச் சென்றுவிட்டனர்.

அமெரிக்காவில் அண்மைக் காலமாக வன்முறை சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த ஒரே மாதத்தில் பல இடங்களில் இதேபோன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன