Advertisement

பறக்கும் தட்டுகள் ஆய்வுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒதுக்கிவந்த நிதி நிறுத்தப்பட்டாலும், ஆய்வு தொடர்கிறதா? என்பதில் மர்மம்

அமெரிக்கப் பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன், UFO எனப்படும் பறக்கும் தட்டுகள் குறித்த கண்காணிப்பு நிதியை 5 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாகக் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்லப்பயன்படுத்தும் அடையாளம் தெரியாத பறக்கும் வாகனங்களான Unidentified Flying Object வானில் அவ்வப்போது தென்படுவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டில் 2007-ம் ஆண்டு முதல் 22 மில்லியன் டாலர் நிதி UFO குறித்த கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் முன்பே அதற்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், அதைவிட முக்கிமான பிற துறைகளுக்கு நிதி செலவிடப்படுவதாகவும் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லாரா தெரிவித்துள்ளார். நிதி நிறுத்தப்பட்டாலும், பறக்கும் தட்டுகள் குறித்த ஆய்வு தொடர்கிறதா? என்பதில் மர்மம் நீடிக்கிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன