Advertisement
Advertisement

அமித்ஷா தொடர்புடைய வழக்கை விசாரித்த நீதிபதி மரணம்

பா.ஜ.க தலைவர் அமித்ஷா தொடர்புடைய வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம் தொடர்பான பத்திரிகைச்செய்தி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூனில் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ப்ரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா, பாஜக தலைவர் அமித்ஷா தொடர்புடைய சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்தார். அந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.

இதுவரை அவரது மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த அவரது குடும்பத்தினர், தற்போது, அவரது மரணம் தொடர்பான அறிக்கையிலும், அவரது உடல் ஒப்படைக்கப்பட்டபோது இருந்த நிலையிலும் சந்தேகம் தெரிவித்துள்ளதாக கேரவன் என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன