அப்துல் கலாமின் நினைவு மணிமண்டபத்தில் அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வரும் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மணி மண்டபத்தை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பேய்க்கரும்பில் 15 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

இப்பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான வரும் 27ஆம் தேதியன்று மணிமண்டபம் திறக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் மணிமண்டப பணிகளை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயல் அதிகாரி கிறிஸ்டோபர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

இங்கு அறிவுசார் மையம் அமைக்க தமிழக அரசிடம் நிலம் கேட்டுள்ளதாகவும், கிடைத்தவுடன் பணிகள் தொடங்கி விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன