அனைவருக்கும் வீடு திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபரை, இளைஞர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலத்தில் அழகாபுரம், புதூர், ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி இண்டர்நெட் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்துவோர் விண்ணப்பங்களை 500 ரூபாய் வரை விற்று லாபம் பார்ப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணப்பங்களை பதிவு செய்வதாக கூறி புதூரை சேர்ந்த ராஜன் என்பவர், பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள், அவரை பிடித்து அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன