அனைத்து சிறைச்சாலைகளில் செல்போன் ஜாமர் கருவிகள் அமைக்கப்படும் – சிறைத்துறை டிஐஜி பாஸ்கரன்

தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் தலா ஒரு கோடி ரூபாய் செலவில் செல்போன் ஜாமர் கருவிகள் அமைக்கப்படும் என சிறைத்துறை டிஐஜி பாஸ்கரன் கூறியுள்ளார். கடலூர் கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறைச்சாலை நுழைவு வாயிலில், சிறைக் கைதிகளைக் கொண்டு சிறை அங்காடி உணவகம், இனிப்பக்கம், துணி தேய்ப்பகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை சிறைத்துறை டி.ஐ.ஜி. பாஸ்கரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியார்களைச் சந்தித்த பாஸ்கரன், சிறைச்சாலைகளில் கைதிகளிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க கோவை, புழல் ,வேலூர் சிறைச்சாலைகளில் செல்போன் ஜாமர் பொருத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் கடலூரில் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன