அதிக மக்கள் கூடும் இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் – கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்ற தீவிரவாதி எச்சரிக்கை

இந்தியாவில் அதிக மக்கள் கூடும் விழாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என ஐ எஸ் தீவிரவாதி ஒருவன் எச்சரிக்கை விடுத்துள்ளான்.

மலையாளத்தில் பேசி வெளியிடப்பட்டுள்ள அந்த ஆடியோவில், அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் இசை நிகழ்ச்சியில் தனிநபர் நடத்திய கொடூர தாக்குதலைப் போலவே, இந்தியாவில் கும்பமேளா அல்லது திருச்சூர்-பூரம் திருவிழா போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளான்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ((Daulatul Islam)) தவுலதுல் இஸ்லாம் என்ற தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ள அந்த ஆடியோவில் உள்ளது ரஷித் அப்துல்லா என்ற நபரில் குரல் எனவும், கேரள மாநிலம் காசர்கோடு ((Kasaragod)) பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்று ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள அந்த நபர் தேசிய புலனாய்வுத் துறையினராலும் சர்வதேச போலிசாராலும் தேடப்படும் தீவிரவாதி எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன