அதிகாரம் படைத்தவர்களுடன் தன்னால் ஒத்துப் போக முடியாது – ஷேவாக்

பி.சி.சி.ஐ.யில் அதிகாரம் படைத்தவர்களுடன் ஒத்துப் போக முடியாது என்பதால் தான் தம்மால் இந்திய அணியின் பயிற்சியாளராக முடியவில்லை என்று வீரேந்தர் ஷேவாக் கூறியுள்ளார். இந்திய அணிக்கு பயிற்சியாளராக வேண்டும் என்று தாம் ஒருபோதும் நினைத்ததில்லை என்று தெரிவித்த ஷேவாக், பி.சி.சி.ஐ. செயலாளர்களான அமிதாப் சவுத்திரி, மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே பதவிக்கு விண்ணப்பித்ததாகக் கூறினார்.

ரவி சாஸ்திரி முன்கூட்டியே விண்ணப்பித்து இருந்தால், தாம் அந்தப் பதவிக்கு விண்ணப்பித்து இருந்திருக்க மாட்டேன் என்று கூறிய ஷேவாக், எதிர்காலத்தில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!