அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் வடகொரியாவை முற்றாக அழிக்க நேரிடும் – ட்ரம்ப்

அமெரிக்கா நினைத்தால் வடகொரியாவை சுக்குநூறாக்க முடியும் என்று ஐநா பொதுக்கூட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யூ யார்க் நகரில் நடைபெற்று வரும் ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், அமெரிக்காவை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதே முதல் கடமை என்றார். சிரியா, ஈராக் நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதில் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளதாக கூறிய டிரம்ப், அகதிகளுக்கு அடைக்களம் தரும் நாடுகளுக்கு நன்றியும் தெரிவித்தார். வடகொரியாவின் பொறுப்பற்ற செயல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதாக, அந்நாட்டு பிரதிநிதிகளின் எதிரே டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்கா நினைத்தால், வடகொரியாவை முற்றிலும் அழிக்க முடியும் என்றும், ஆனால் அதற்கான அவசியம் வராது என்று நம்பிக்கை இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். தீவிரவாத அச்சுறுத்தல் என்பது அமெரிக்காவிற்கு மட்டும் அல்ல, உலக நாடுகளுக்கும் தான் என்று குறிப்பிட்ட அவர், அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன