Advertisement

ஃபிலிப்பைன்ஸ், போதைப் பொருளுக்கு எதிரான போரிலிருந்து காவல்துறை விடுவிப்பு

ஃபிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்டே போதைப்பொருளுக்கு எதிரான போரில் இருந்து காவல்துறையை விடுவித்துள்ளார்.

போதைப் பொருளை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த டுடெர்டே, சுமார் 4 ஆயிரம் பேரைக் கொன்று குவித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து மேற்கத்திய நாடுகளும், மனித உரிமை ஆணையமும் அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. இந்நிலையில், காவல்துறையை இந்த போரிலிருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ள அந்நாட்டு அதிபர் டுடெர்டெ, ஃபிலிப்பைன்ஸ் போதைபொருள் அமலாக்கத்துறை முகமை மட்டும் போதை ஒழிப்பை கவனிக்கும் என அறிவித்துள்ளார். காவல்துறையே அதிக உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படும் நிலையில், அத்துறையை இந்த போரிலிருந்த விடுவித்தன் மூலம் உயிரிழப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், வீதி வீதியாகச் சென்று போதைப் பொருள் விநியோகிப்பவர்களைக் கொல்வதற்கு பதில், பெரிய மீன்கள் எனக் குறிப்பிடப்படும் அதன் உற்பத்தியாளர்களை அந்நாட்டு அரசு தற்போது குறிவைத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன