​​ அப்போலோ மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவர் குழுவை ஆறுமுகசாமி ஆணையமே அமைக்க தமிழக அரசு ஒப்புதல் என தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அப்போலோ மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவர் குழுவை ஆறுமுகசாமி ஆணையமே அமைக்க தமிழக அரசு ஒப்புதல் என தகவல்


அப்போலோ மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவர் குழுவை ஆறுமுகசாமி ஆணையமே அமைக்க தமிழக அரசு ஒப்புதல் என தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவ வல்லுநர் குழுவை அமைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த 30 தொகுப்புகள் அடங்கிய ஆவணங்களை அப்பல்லோ மருத்துவமனை கடந்த ஜனவரி மாதம் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தது. ஆனால் இந்த ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவ குழு அமைக்குமாறு தமிழக அரசை ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது.  இந்நிலையில் மருத்துவ வல்லுநர் குழுவை அமைக்கும் அதிகாரம் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து 8 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாகவும், இந்தக் குழு ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.