​​ நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தில் தங்க பதக்கங்கள் கொள்ளை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தில் தங்க பதக்கங்கள் கொள்ளை

நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தில் தங்க பதக்கங்கள் கொள்ளை

சென்னையில் நடிகர் பாத்திபன் அலுவலகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட பதக்கங்கள் கொள்ளை போயுள்ளன. நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் அலுவலகம், திருவான்மியூர் காமராஜ் நகரில் இயங்கி வருகிறது. இவரது அலுவலகத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த சிறிய தங்க கட்டிகளையும், பார்த்திபனுக்கு வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பதக்கங்களையும் கொள்ளையடித்து சென்றதாகக் கூறப்படுகிறது.

எப்படி கொள்ளை அடிக்கப்பட்டது, கொள்ளை போயுள்ள பொருட்கள் என்னென்ன, எவ்வளவு மதிப்புடையவை என்பது தொடர்பான விவரங்களை பார்த்திபன் தரப்பும், காவல்துறை தரப்பும் தெரிவிக்கவில்லை. திருவான்மியூர் காவல் நிலையத்தில் பார்த்திபன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.