​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.1 கோடிக்கு பஞ்சலோக முருகன் சிலையை விற்க முயன்ற வழக்கில், மேலும் ஒருவர் கைது

Published : Feb 12, 2019 4:10 PM

ரூ.1 கோடிக்கு பஞ்சலோக முருகன் சிலையை விற்க முயன்ற வழக்கில், மேலும் ஒருவர் கைது

Feb 12, 2019 4:10 PM

ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற தொன்மையான பஞ்சலோக முருகன் சிலை மீட்கப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான லேத்பட்டறையில் பஞ்சலோக முருகன் சிலை விற்பதற்காக மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்த சிலை கடத்ததல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த சிலையை மீட்டனர். முகேஷ், இஸ்மாயில், தேசனடிகள் ஆகியோருடன் இணைந்து சிலையை விற்க முயன்றதும் தெரியவந்தது.

இவ்வழக்கில் சிவக்குமார், இஸ்மாயில் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த முகேஷ் என்ற நபரும் தற்போது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 3 கிலோ எடை கொண்ட முருகன் சிலை, இரண்டரை வருடங்களுக்கு முன் அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டது என்று முகேஷ் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.