​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாயியை, காட்டுயானை மிதித்து கொன்றதால், மக்கள் பீதி

Published : Feb 12, 2019 4:06 PM

விவசாயியை, காட்டுயானை மிதித்து கொன்றதால், மக்கள் பீதி

Feb 12, 2019 4:06 PM

தேனி வருசநாடு வனப்பகுதியில் விவசாயியை, காட்டுயானை மிதித்து கொன்றதால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், அரசரடி கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

சுற்றிலும் மலைசூழ்ந்த இந்த கிராமத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த மாயி என்ற விவசாயி நேற்று இரவில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று, மாயியை விரட்டி விரட்டி தாக்கியது. தப்பி ஓட முயன்ற மாயியை துதிக்கையால் மடக்கிபிடித்து தனதுகாலால் ஏறிமிதித்தது.

இதில் உடல் நசுங்கிய மாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.