​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10விழுக்காடுஇட ஒதுக்கீடு, சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்

Published : Jan 12, 2019 7:30 PM

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10விழுக்காடுஇட ஒதுக்கீடு, சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்

Jan 12, 2019 7:30 PM

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

8ஆம் தேதி அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, வியாழன் அன்று மாநிலங்களவையிலும் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. 9 மணி நேர விவாதத்திற்குப் பின்னர் 165 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுகுறித்து மத்திய அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.