​​ தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் நிதியுதவி பெற்ற குழந்தைகள் மையத்தை மூடிய மக்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் நிதியுதவி பெற்ற குழந்தைகள் மையத்தை மூடிய மக்கள்


தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் நிதியுதவி பெற்ற குழந்தைகள் மையத்தை மூடிய மக்கள்

Mar 28, 2018 8:47 PM

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கி வந்த குழந்தைகள் மையத்தை ஊர்மக்களே பூட்டியுள்ளனர்.

அங்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் குழந்தை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கப்பட்டு வந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று அத்திமரப்பட்டி மக்கள் ஸ்டெர்லைட் நிறுவனப் பெயர் இடம்பெற்றிருந்த பதாகையைக் கிழித்தெறிந்ததுடன், அங்கிருந்த தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.