​​ தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

Published : Mar 23, 2018 2:18 AM

தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

Mar 23, 2018 2:18 AM

தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி வியாழன் காலை 8 மணி முதல் வெள்ளி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கடற்படை, கடலோரக் காவல்படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம், மட்டுமன்றி தமிழக போலீசாரும் கலந்துகொண்டுள்ளனர். பல்வேறு கடலோர மாவட்டங்களில் பயங்கரவாதிகளாக வேடமிட்டு வந்த கடற்படை, கடலோரக் காவல்படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்தவர்களை தமிழகப் போலீசார் கண்டுபிடிப்பது போல் ஒத்திகை நடைபெற்றது.