​​ அப்பல்லோவில் CCTV'க்களின் இயக்கம் நிறுத்தப்பட்ட குறித்து மருத்துவமனை நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும்: TTV தினகரன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அப்பல்லோவில் CCTV'க்களின் இயக்கம் நிறுத்தப்பட்ட குறித்து மருத்துவமனை நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும்: TTV தினகரன்


அப்பல்லோவில் CCTV'க்களின் இயக்கம் நிறுத்தப்பட்ட குறித்து மருத்துவமனை நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும்: TTV தினகரன்

அப்பல்லோவில் சிசிடிவிக்களின் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டது குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம்தான் பதிலளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் சிசிடிவி கேமராக்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தது குறித்து டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தினகரன், சிசிடிவிக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து அப்பல்லோ மருத்துவமனை தான் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்தார். தாங்கள் எந்தத் தவறும் செய்யாததால் எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.