​​ மெல்போர்ன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி, தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெல்போர்ன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி, தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு

மெல்போர்ன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி, தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு

Nov 09, 2018 7:55 PM

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன்((Melbourne )) நகரில், கத்தியை கொண்டு நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது.

மெல்போர்ன் நகரின் மத்திய பகுதியான ஸ்வான்ஸ்டன் தெருவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில், அந்நாட்டு நேரப்படி மாலை சுமார் 4.30 மணியளவில் ஏராளமான மக்கள் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த ஒருவர், கார் ஒன்றிற்கு தீ வைத்ததுடன் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் வெறித்தனமாக கத்தியால் குத்தினார்.

இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை பிடிக்க வந்த போலீசாரையும் அவர் கத்தியால் குத்த முயன்றார். இதையடுத்து அந்த நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அது ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் திட்டமிட்ட தாக்குதல் எனத் தெரியவந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, மெல்போர்ன் கத்தி தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது.