​​ இந்தியாவின் "ஐஎன்எஸ் அரிஹந்த்" நீர்மூழ்கி கப்பல் குறித்து பாகிஸ்தான் பெருங்கவலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவின் "ஐஎன்எஸ் அரிஹந்த்" நீர்மூழ்கி கப்பல் குறித்து பாகிஸ்தான் பெருங்கவலை

Published : Nov 09, 2018 7:44 PMஇந்தியாவின் "ஐஎன்எஸ் அரிஹந்த்" நீர்மூழ்கி கப்பல் குறித்து பாகிஸ்தான் பெருங்கவலை

Nov 09, 2018 7:44 PM

அணு ஆற்றலில் இயங்கும், "ஐஎன்எஸ் அரிஹந்த்" நீர்மூழ்கி கப்பலின் முதல் கண்காணிப்பு இயக்கத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள நிலையில், இதுதொடர்பாக, பாகிஸ்தான் கவலை வெளியிட்டிருக்கிறது.

முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "ஐஎன்எஸ் அரிஹந்த்" நீர்மூழ்கி கப்பல், 6 ஆயிரம் டன் எடை கொண்டது. யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்க கூடிய நீர்மூழ்கி கப்பல், தெற்காசிய பிராந்தியத்தில், இயக்கப்படுவது முதல் முறையாகும்.

இந்திய பெருங்கடல் பகுதியில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், அண்மையில், "ஐஎன்எஸ் அரிஹந்த்" நீர்மூழ்கி கப்பலை இந்தியா இயக்கி, அந்த செயல்பாட்டை வெற்றிகரமாக நிரூபித்திருக்கிறது.

இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல், இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் இயக்கச் செயல்பாடு, தெற்காசிய பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கூறினார்.