​​ மழை காலத்தை முன்னிட்டு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிலக்கரி கோரப்பட்டுள்ளது - தங்கமணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழை காலத்தை முன்னிட்டு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிலக்கரி கோரப்பட்டுள்ளது - தங்கமணி

Published : Nov 09, 2018 7:44 PMமழை காலத்தை முன்னிட்டு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிலக்கரி கோரப்பட்டுள்ளது - தங்கமணி

Nov 09, 2018 7:44 PM

மழை காலத்தை முன்னிட்டு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிலக்கரி கோரப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூர் அருகே தார்ச்சாலை மற்றும் ஏரி தூர்வாரும் திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்திய தொகுப்பிலிருந்து 10 நாட்களில் 1000 மெகாவாட்டும் 1 மாதத்தில் 6 ஆயிரம் மெகாவாட்டும் மின்சாரம் கொடுக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகக் கூறினார்.

அரசு மதுகுடிக்க யாரையும் வீட்டிற்கு சென்று அழைக்கவில்லை என்றும் அவர்களாகவே வந்து மது குடிப்பதாகவும் தெரிவித்த அவர், அரசு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை என்றும் கூறினார்.