​​ விவசாய நிலங்களை சேதப்படுத்தும் 2 காட்டுயானைகளை வனத்துக்குள் விரட்ட 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் 2 காட்டுயானைகளை வனத்துக்குள் விரட்ட 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன

Published : Nov 09, 2018 7:41 PM

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் 2 காட்டுயானைகளை வனத்துக்குள் விரட்ட 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன

Nov 09, 2018 7:41 PM

கோவையில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் 2 காட்டுயானைகளை வனத்துக்குள் விரட்ட 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கோவை தடாகம், மாங்கரை உள்ளிட்ட இடங்களில் விவசாய நிலங்களை காட்டு யானைகளான சின்னத்தம்பி, விநாயகம் ஆகியவை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காட்டு யானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினரை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் காட்டு யானைகளை விரட்ட சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து சேரன், ஜான் என்ற இரு கும்கி யானைகளை வனத்துறையின கொண்டு வந்துள்ளனர். இந்த யானைகள் துடியலூர் மற்றும் பன்னிமடை பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு காட்டு யானைகளை விரட்டும் பணி விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.