​​ ரிலையன்ஸ் Defense உடனான ஒப்பந்தம், ஈடுசெய் ஒப்பந்தங்களில் 10 சதவீதம் மட்டுமே உள்ளடக்கியது - டசால்ட் CEO பேட்டி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரிலையன்ஸ் Defense உடனான ஒப்பந்தம், ஈடுசெய் ஒப்பந்தங்களில் 10 சதவீதம் மட்டுமே உள்ளடக்கியது - டசால்ட் CEO பேட்டி

ரிலையன்ஸ் Defense உடனான ஒப்பந்தம், ஈடுசெய் ஒப்பந்தங்களில் 10 சதவீதம் மட்டுமே உள்ளடக்கியது - டசால்ட் CEO பேட்டி

Oct 12, 2018 5:24 PM

ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துடன் கூட்டாக அமைக்கப்படும் தொழிற்சாலை, இந்தியாவில் செய்யப்படும் ஈடுசெய் ஒப்பந்தங்களில் 10 சதவீதம் மட்டுமே உள்ளடக்கியது என்றும், இதுதவிர நூறு இந்திய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி 30 நிறுவனங்களுடன் கூட்டினை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை கொள்முதல் நடைமுறைகளின்படி, ஒப்பந்தம் பெறும் நிறுவனம், வேலைவாய்ப்புகளையும் உற்பத்தியையும் பெருக்கும் வகையில் குறிப்பிட்ட சதவீதத்தில் உள்நாட்டில் தயாரிப்புத்துறையில் முதலீடுகளை செய்ய வேண்டும். இந்த நிபந்தனையை நிறைவேற்றும் வகையில் செய்யப்படும் ஒப்பந்தங்கள், ஆஃப்செட் ஒப்பந்தங்கள் (offsets contract) என அழைக்கப்படுகின்றன. அந்த வகையில், ரஃபேல் விமான ஒப்பந்தத்தை பெற்றுள்ள ஃபிரான்சின் டசால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துடன் கூட்டாக நாக்பூரில் தொழிற்சாலை அமைக்கிறது. ஃபால்கன் மற்றும் ரஃபேல் விமானங்களுக்கான உதிரி பாகங்கள் இதில் தயாரிக்கப்பட உள்ளது.

இது, ஈடுசெய் ஒப்பந்தங்களில் 10 சதவீதம் மட்டுமே உள்ளடக்கியது என்றும், இதேபோல நூறு இந்திய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, 30 நிறுவனங்களுடன் கூட்டினை உறுதிசெய்திருப்பதாகவும், டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் சிஇஓ எரிக் டிராப்பியர் (Eric Trappier) தெரிவித்துள்ளார். ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், ஆஃப்செட் என்று குறிப்பிடப்படுவது ஈடுசெய்தல் என்ற பொருளில் ஃபிரான்சில் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இத்தகைய ஒப்பந்தங்களை செய்ய வேண்டும் என்பது இந்தியாவின் பாதுகாப்புத் துறை கொள்முதல் நடைமுறைகளின்படி கட்டாயம் என்றாலும், யாருடன் கூட்டு சேர்வது என்பதை முடிவு செய்யும் சுதந்திரம் டசால்ட் நிறுவனத்திற்கு உண்டு என்றும் எரிக் டிராப்பியர் கூறியுள்ளார்.