​​ சபரிமலைக்கு வரும் பெண்களைக் 2 ஆக கிழிக்க வேண்டும் என கூறிய மலையாள நடிகரின் பேச்சால் சர்ச்சை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சபரிமலைக்கு வரும் பெண்களைக் 2 ஆக கிழிக்க வேண்டும் என கூறிய மலையாள நடிகரின் பேச்சால் சர்ச்சை

சபரிமலைக்கு வரும் பெண்களைக் 2 ஆக கிழிக்க வேண்டும் என கூறிய மலையாள நடிகரின் பேச்சால் சர்ச்சை

Oct 12, 2018 5:19 PM

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் வரும் பெண்களை இரண்டாகக் கிழிக்க வேண்டும் என மலையாள நடிகர் கொல்லம் துளசி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கண்டித்துக் கேரள மாநிலம் கொல்லத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகரும் பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி, ஐயப்பன் கோவிலுக்குள் நுழையும் பெண்களை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியைக் கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் போட்டுவிட்டு, இன்னொரு பாதியை டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பேசினார்.

சபரிமலைக்குப் பெண்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பலரும் பேசி வரும் நிலையில் நடிகர் கொல்லம் துளசி பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.