​​ பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ராகுல்காந்தி ஆதரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ராகுல்காந்தி ஆதரவு

Published : Oct 12, 2018 5:09 PM

பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ராகுல்காந்தி ஆதரவு

Oct 12, 2018 5:09 PM

மீ டூ விவகாரத்தில் பெண்கள் உண்மையை உரத்தும் தெளிவாகவும் சொல்ல வேண்டும் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது உண்மையைச் சொல்லி வருகின்றனர். இந்த எழுச்சி பற்றிக் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால் உண்மையை உரத்தும் தெளிவாகவும் சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களைக் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துவது பற்றி ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய நேரமிது என்றும் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.