​​ "இறைச்சி ஏற்றுமதிக்கு தடை கோரிய வழக்கு” எல்லோரும் சைவமாக மாறுங்கள் என உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"இறைச்சி ஏற்றுமதிக்கு தடை கோரிய வழக்கு” எல்லோரும் சைவமாக மாறுங்கள் என உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்

"இறைச்சி ஏற்றுமதிக்கு தடை கோரிய வழக்கு” எல்லோரும் சைவமாக மாறுங்கள் என உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்

Oct 12, 2018 4:57 PM

எல்லோரும் சைவ உணவு முறைக்கு மாறவேண்டும் என உத்தரவுபோட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, டெல்லி மற்றும் குருகிராமில் இறைச்சிக் கடைகளை அடைக்க வேண்டும் என சில இந்துத்வா அமைப்புகள் நிர்ப்பந்தித்தாக தகவல் வெளியானது. இந்நிலையில், உணவுக்காகவும், தோல் பொருட்களுக்காகவும் இறைச்சி ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம்,   இந்த நாட்டில் அனைவரும் சைவம் உணவு முறையைப் பின்பற்றுவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா என கேள்வி எழுப்பினார். எல்லோரும் சைவத்திற்கு மாறிவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.