​​ "மீ டூ" பாலியல் புகார்களால் எழும் பிரச்சனைகள் குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட உள்ளது: மேனகா காந்தி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"மீ டூ" பாலியல் புகார்களால் எழும் பிரச்சனைகள் குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட உள்ளது: மேனகா காந்தி

"மீ டூ" பாலியல் புகார்களால் எழும் பிரச்சனைகள் குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட உள்ளது: மேனகா காந்தி

Oct 12, 2018 4:51 PM

"மீ டூ" பாலியல் புகார்களால் எழும் பிரச்சனைகள் குறித்து ஆய்வுசெய்ய நீதித்துறை மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

பொதுவாழ்வில் உள்ள பிரபலங்களின் பாலியல் தொல்லை, பாலியல் அத்துமீறல், பாலியல் வன்முறை குறித்து, பாதிக்கப்பட்ட பெண்களின் குற்றச்சாட்டுகள் "மீ டூ" என்ற பெயரில் வெளியாகி வருகின்றன. இத்தகைய புகார்களின் பின்னுள்ள வலியை தம்மால் உணரமுடிவதாகவும், பணியில் பாலியல் அத்துமீறல் என்பது முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாத விஷயம் என்றும் மேனகா காந்தி கூறியுள்ளார்.

மீ டு பாலியல் புகார்களால் எழும் பிரச்சனைகள் குறித்து ஆய்வுசெய்ய நீதித்துறை மற்றும் சட்ட வல்லுநர்கள் குழுவை தமது அமைச்சகம் அமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாலியல் புகார்களை கையாளும் சட்ட மற்றும் நிறுவன வழிமுறைகள் குறித்தும், அவற்றை வலுப்படுத்துவது குறித்தும் இந்த குழு அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்கும் என்றும் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.