​​ தம்மைக் கொல்ல டிரம்பின் அமெரிக்க அரசு நிர்வாகம், அண்டை நாட்டுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தம்மைக் கொல்ல டிரம்பின் அமெரிக்க அரசு நிர்வாகம், அண்டை நாட்டுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

Published : Oct 12, 2018 4:32 PM

தம்மைக் கொல்ல டிரம்பின் அமெரிக்க அரசு நிர்வாகம், அண்டை நாட்டுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

Oct 12, 2018 4:32 PM

தம்மைக் கொல்ல டிரம்பின் அமெரிக்க அரசு நிர்வாகம் அண்டை நாட்டுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் மதுரோ குற்றம்சாட்டியுள்ளார்.

மனித உரிமைகளை ஒடுக்கி, பொருளாதார சீர்குலைவுக்கு வழிவகுத்த சர்வாதிகாரி மதுரோ என குற்றம்சாட்டி, அமெரிக்கா அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதையடுத்து, 2015-க்குப் பின் சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், உணவு மருந்து பற்றாக்குறை, அதிகபணவீக்கம், வன்முறை குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் கிரிப்டோ கரன்சியான பெட்ரோவின் சர்வதேச வர்த்தக தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய வெனிசுலா அதிபர் மதுரோ, தம்மை படுகொலை செய்துவிடுமாறு அண்டை நாடான கொலம்பியாவுக்கு, டிரம்பின் அமெரிக்க அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். ஆனால், தமது தலை முடியைக் கூட தீண்ட முடியாது எனவும் மதுரோ சவால் விடுத்துள்ளார்.