​​ போலி மருத்துவரின் வீட்டிற்கு திடீரென சென்ற மாவட்ட நீதிபதி..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி மருத்துவரின் வீட்டிற்கு திடீரென சென்ற மாவட்ட நீதிபதி..!

போலி மருத்துவரின் வீட்டிற்கு திடீரென சென்ற மாவட்ட நீதிபதி..!

Sep 12, 2018 8:55 PM

திருவண்ணாமலையில் போதிய கல்வித்தகுதி இன்றி மருத்துவம் பார்த்து வந்தவரின் வீட்டிற்கு சென்ற மாவட்ட நீதிபதி மகிழேந்தி, போலி மருத்துவரைக் கண்டித்தார். 

குன்னியந்தலில் வசிக்கும் சரவணன் என்பவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை அறை உதவியாளராக உள்ளார். ஆனால் இவர் சொந்த ஊரில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து சரவணனின் வீட்டிற்கு மாவட்ட நீதிபதி மகிழேந்தி திடீரென சென்றார். போலீசார் மற்றும் நீதிபதியைக் கண்ட சரவணன் பதற்றமடையவே, அவருடைய குழந்தைகளிடம் நீதிபதி கனிவாகப் பேசினார்.

image

இதை அடுத்து சரவணனின் வீட்டிற்குள் சென்று சோதனை மேற்கொண்ட போது காயங்களுக்கு கட்டு போடுவதற்கான உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை அடுத்து சரவணனிடம் நீதிபதி மகிழேந்தி  விசாரித்தார். 2 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக சரவணன் கூறவே, நீதிபதி அவரைக் கண்டித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி மகிழேந்தி, போலி மருத்துவர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.