​​ பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக அரசே காரணம் : தம்பிதுரை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக அரசே காரணம் : தம்பிதுரை

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக அரசே காரணம் : தம்பிதுரை

Sep 12, 2018 8:35 PM

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசே காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்திருக்கிறார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த அம்மாபட்டி ஊராட்சி பகுதிகளில், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தபின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கொடுத்ததன் விளைவாக, இஷ்டம்போல் லாபத்திற்காக, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாகவும், மக்களை பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை என்றும், தம்பிதுரை தெரிவித்திருக்கிறார்.