​​ தூய்மைக்கான சேவை இயக்கத்தின் பகுதியாக ஒவ்வொருவரும் மாறவேண்டும் - பிரதமர் மோடி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூய்மைக்கான சேவை இயக்கத்தின் பகுதியாக ஒவ்வொருவரும் மாறவேண்டும் - பிரதமர் மோடி

Published : Sep 12, 2018 8:28 PM

தூய்மைக்கான சேவை இயக்கத்தின் பகுதியாக ஒவ்வொருவரும் மாறவேண்டும் - பிரதமர் மோடி

Sep 12, 2018 8:28 PM

தூய்மைக்கான சேவை இயக்கத்தின் பகுதியாக ஒவ்வொருவரும்  மாறவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு தொடங்குகிறது. தூய்மை இந்தியா என்கிற காந்தியின் கனவை நனவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட  தூய்மை இந்தியா இயக்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு நாளாகவும் அது அமைந்திருக்கிறது.

இதனை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, தூய்மைக்கான சேவை இயக்கம் வரும் 15-ம்  தேதி தொடங்குவதாக கூறியுள்ளார். இது மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும்  மகத்தான அஞ்சலி என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு நாம் அனைவரும் ஒன்று கூடுவோம் என தெரிவித்துள்ளார்.

தூய்மை இந்தியா இயக்கம் வலுப்பட மிகுந்த ஈடுபாட்டுடன் களப்பணியாற்றியவர்களுடன், கலந்துரையாடும் தருணத்தை தாம் ஆவலோடு எதிர்நோக்கியிருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.