​​ சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திவந்த போராட்டம் வாபஸ்
Polimer News
Polimer News Tamil.

சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திவந்த போராட்டம் வாபஸ்

சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 16 நாட்களாக நடத்திவந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பாரிமுனையில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் கடந்த 2008 ஆம் ஆண்டு மாணவர்களிடையே நடந்த மோதலை தொடர்ந்து, கல்லூரியை இடமாற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய சட்டக்கல்லூரிகள் கட்டப்பட்டன. இந்தாண்டு முதல் சென்னையில் இயங்கும் சட்டக்கல்லூரி அங்கு செயல்பட துவங்கும் எனக் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டக்கல்லூரி மாணவர்கள், 16 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, சட்டக்கல்லூரி இயக்குனர் சந்தோஷ்குமார் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.