​​ சுபிக்சா சுப்பிரமணியனின் ஜாமீன் மனு தள்ளுபடி
Polimer News
Polimer News Tamil.

சுபிக்சா சுப்பிரமணியனின் ஜாமீன் மனு தள்ளுபடி

வங்கிகளில் கடன் வாங்கி பல கோடி மோசடி செய்த வழக்கில் கைதான சுபிக்சா சுப்பிரமணியனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்தடுத்து ஆயிரத்து 600 கிளைகளை திறந்த சுபிக்சா, மேலும், 2 ஆயிரம் கிளைகள் தொடங்கப் போவதாக கூறி, 13 வங்கிகள், பொதுமக்களிடம் பணம் திரட்டி ஏமாற்றியதாக 300க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின. வங்கிகளில் கடன்பெற்று மோசடி செய்த வழக்கில், சுபிக்சா சுப்பிரமணியனை, கடந்த மாதம் 27ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து சுபிக்சா சுப்பிரமணியனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.