​​ அரசு அதிகாரிகளை பணி செய்யாவிடமால் தடுத்த புகாரில் வெற்றிவேல், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
Polimer News
Polimer News Tamil.

அரசு அதிகாரிகளை பணி செய்யாவிடமால் தடுத்த புகாரில் வெற்றிவேல், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

அரசு அதிகாரிகளை பணி செய்யாவிடமால் தடுத்த புகாரில் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

அண்மையில் புகார் தெரிவிப்பதற்காக தலைமைச் செயலகத்திற்கு சென்ற இருவரையும், காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகளை மிரட்டியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில், முன்ஜாமீன் கோரி இருவரும் தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. நிபந்தனை அடிப்படையில் முன் ஜாமீன் வழங்குவதாகவும், 2 வாரம் மதுரை தள்ளாகுளம் காவல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையொப்பம் இடவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.