​​ புதுக்கட்சி தொடங்கும் விழாவிற்கு, ஸ்லீப்பர் செல்கள் வரமாட்டார்கள் - தினகரன்
Polimer News
Polimer News Tamil.

புதுக்கட்சி தொடங்கும் விழாவிற்கு, ஸ்லீப்பர் செல்கள் வரமாட்டார்கள் - தினகரன்

தாம் புதுக்கட்சி தொடங்கும் விழாவிற்கு, அதிமுக-வில் உள்ள தமது ஸ்லீப்பர் செல்கள் வரமாட்டார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் டெல்லி செல்வதாகவும், அது ஏன் என்பதை தெரிந்துகொள்ள நாளை வரை பொறுத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

தான் கட்சி ஆரம்பித்தால் நிலைக்காது என்று கூறிய கடம்பூர் ராஜூவை முதலில் அவரது தொகுதியான கோவில்பட்டிக்கு சென்று வரச்சொல்லுங்கள் என்று டிடிவி தினகரன் கூறினார். 

இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கின் விசாரணைக்காக ஆஜராவதற்கு டிடிவி தினகரன் டெல்லி செல்வதாகக் கூறப்படுகிறது.