​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒயரில் இருந்து இரும்பு கேட்டில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம்: கேட்டைத் தொட்ட தலைமைச் செயலக ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

Published : Nov 28, 2021 7:00 PM

ஒயரில் இருந்து இரும்பு கேட்டில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம்: கேட்டைத் தொட்ட தலைமைச் செயலக ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

Nov 28, 2021 7:00 PM

சென்னை வேப்பேரியில் இரும்பு கேட்டில் கசிந்து கொண்டிருந்த மின்சாரம் பாய்ந்து தலைமைச் செயலக ஊழியர் உயிரிழந்தார். முரளி கிருஷ்ணன் என்ற அந்த நபர் தலைமைச் செயலகத்தில் மக்கள் தொடர்புத்துறையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

காலை கடைக்குச் செல்வதற்காக வீட்டுக்கு வெளியே வந்தவர், இரும்பு கேட்டை கைகளால் தொட்டு திறக்க முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே முரளிகிருஷ்ணன் உயிரிழந்தார்.

அந்த கேட்டின் மீது படிந்தவாறு மின் ஒயர் சென்றுள்ளது. பல இடங்களில் மின்காப்பு சேதமடைந்து காணப்படும் அந்த ஒயரில் இருந்து மின்சாரம் கசிந்து கேட்டின் மீது பாய்ந்தவாறு இருந்திருக்கிறது. அதனை அறியாமல் கேட்டைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி முரளிகிருஷ்ணன் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.