​​ மாநகராட்சியில் டெண்டர் மோசடி..! அதிகாரிகள் மீது புகார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாநகராட்சியில் டெண்டர் மோசடி..! அதிகாரிகள் மீது புகார்


மாநகராட்சியில் டெண்டர் மோசடி..! அதிகாரிகள் மீது புகார்

May 22, 2018 11:50 AM

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்தை இடிப்பதற்கு பெயருக்கு ஆன்லைனில் டெண்டர் அறிவித்துவிட்டு, அந்த கட்டிடத்தை தங்களுக்கு வேண்டிய ஒப்பந்ததாரரை வைத்து அதிகாரிகள் இடித்து விட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

image

சென்னை வியாசர்பாடி அடுத்த சர்மா நகர் சாரதாம்பாள் காலனியில் இடிந்து விழும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்தது.

image

இந்த கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. கட்டிடத்தை இடிப்பதற்கான ஒப்பந்தம் கோரி கடந்த 16 ஆம் தேதி தமிழக அரசின் tntenders.gov.in இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டது.

கட்டிடத்தை ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் க்குள் இடித்து சமன்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும், அதற்கான முன் வைப்பு தொகை 2 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கபட்டிருந்தது.

பொதுவாக இதுபோன்ற ஒப்பந்தம் கோரும் ஒப்பந்ததாரர்கள் எந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டுமோ அந்த கட்டிடத்தை பார்வையிட்டு இடிக்க ஆகும் செலவினத் தொகையும், இடிக்கப்படும் கட்டிடத்தில் இருக்கும் இரண்டாம் தர பொருட்களை விற்பதால் கிடைக்கும் லாப தொகைக்கும் ஏற்ப ஒப்பந்தம் கோருவது வழக்கம்.

image

செவ்வாய்க்கிழமை மாலை வரை ஒப்பந்தம் கோர கால அவகாசம் மாநகராட்சியால் கொடுக்கப்பட்ட அந்த கட்டிடத்தை பார்வையிடச் சென்ற ஒப்பந்ததாரர்கள், அந்த கட்டிடம் ஏற்கனவே கடந்த 4 நாட்களாக இடிக்கப்பட்டு வரும் தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

image

செவ்வாய்க் கிழமை மாலை மூன்று மணிவரை கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒப்பந்தம் பெறப்பட்டு, அதில் குறைவான தொகையில் ஒப்பந்தம் கோரியவர்களுக்கு, செவ்வாய்கிழமை மாலை 3:30 க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக ஆன்லைனில் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதே விதி. ஆனால் விதியை மீறி முன்கூட்டியே தங்களுக்கு வேண்டப்பட்ட ஒப்பந்ததாரரிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் கட்டிடத்தை இடிக்க அனுமதி வழங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிகாரிகள் தங்களின் சுய ஆதாயத்திற்காகவும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒப்பந்தம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், ஆன்லைன் டெண்டர் என்ற நடைமுறையை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக பணி வாய்ப்பு கிடைக்காத ஒப்பந்ததாரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

image

இந்த முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு பொருள் இழப்பை ஏற்படுத்தும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!