​​ மகாராஷ்ட்ரா மாநில போலீசார் லஞ்சம் பெறுவதை தடுக்க நடவடிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாராஷ்ட்ரா மாநில போலீசார் லஞ்சம் பெறுவதை தடுக்க நடவடிக்கை

Published : May 17, 2018 2:59 AM

மகாராஷ்ட்ரா மாநில போலீசார் லஞ்சம் பெறுவதை தடுக்க நடவடிக்கை

May 17, 2018 2:59 AM

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் லஞ்சம் வாங்குவதை தடுக்க போக்குவரத்து போலீசாருக்கு உடல் கேமிரா வழங்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தின் பீட்  மாவட்டத்தில் சோதனை முயற்சியாக பத்து பேருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கேமிராவை போக்குவரத்து போலீசார் பணி நேரத்தில் சீருடையுடன் இணைத்து அணிந்திருக்க வேண்டும். சட்டையின் மேல் பட்டனை அழுத்தினால் கேமிரா இயங்கத் தொடங்கும், அத்துடன் 180 டிகிரி கோணத்தில் சுற்றி நடக்கும் அனைத்தும் படமாகும் என்று பீட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கண்காணிப்பு அறையில் இருந்து கேமிரா காட்சிகளை காண முடியும் என்ற அவர், போலீசாரின் நடவடிக்கை, போக்குவரத்து சிக்கல் உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்படும் என்றார். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் மாநிலம் முழுவதும் திட்டம் விரிவாக்கப்படும் என ஸ்ரீதர் தெரிவித்தார்.