​​ ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

May 17, 2018 2:24 AM

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்-ஐ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், உதயகுமார், ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.