​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் மக்களுக்கு நன்மை - முதலமைச்சர்

மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து பணியாற்றினால், மக்களுக்கு நன்மைகள் நடக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....

சேலம் விமான நிலையம் விரிவாக்கப்பட்டு, பெரிய விமானங்களும் இயக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி

சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, பெரிய விமானங்களும் இயக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.  சென்னை - சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமை விரைவு வழித்தடம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சேலத்தில் இருந்து...

சேலம் - சென்னை இடையே 7 ஆண்டுகளுக்குப் பின் விமான சேவை இன்று தொடங்குகிறது

சேலம் - சென்னை இடையே விமான சேவை 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கவுள்ளது. விமான சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு 165 ஏக்கர் பரப்பளவில் விமான...

அமராவதியில் பிரம்மாண்ட கட்டிடத்தின் 46ஆவது தளத்தில் முதலமைச்சர் அலுவலகம்

ஆந்திராவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய தலைநகரான அமராவதியில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அலுவலகம் பிரம்மாண்டமான கட்டிடத்தின் 46வது தளத்தில் அமைய உள்ளது. தெலுங்கானா தனிமாநிலமாகப் பிரிந்து சென்றதைத் தொடர்ந்து, ஆந்திராவுக்கென புதிய தலைநகராக 217 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமராவதி...

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் - மத்திய அரசு திட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குப் பதில் காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்க மத்திய நீர்வள அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காவிரி வழக்கில் பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு  தண்ணீர் என்பதை...

பழனிசாமி தலைமையிலான ஒரு ஆண்டு சாதனையை பொறுத்துக் கொள்ள முடியாமல், மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார் - தங்கமணி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஒரு ஆண்டு சாதனையை பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுவதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு...

பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் விலகியது துரதிருஷ்டமானது : அமித் ஷா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது ஆந்திர வளர்ச்சிக்கான முடிவு இல்லை என்றும், அரசியல் ஆதாயத்திற்கானது என்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து, ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபுநாயுடுக்கு...

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையாக ரூ.2, ரூ.5, ரூ.18க்கு காசோலை - விவசாயிகள் கடும் அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையாக 2 ரூபாய், 5 ரூபாய், 18 ரூபாய் என மிகவும் குறைந்த தொகைக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மக்காச்சோளம்,...

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நலத்திட்டங்கள் தொடக்கம்

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கான பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் காசநோய் களப்பணியாளர்களுக்கு கையடக்க கணினியை முதலமைச்சர் வழங்கினார். காச நோயாளிகளின் சத்துணவுக்காக மாதந்தோறும்...

ஏதோ ஒரு மாயையில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் - ஓராண்டு சாதனை விழாவில் முதலமைச்சர் பேச்சு

ஏதோ ஒரு மாயையில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஓராண்டு சாதனையைக் கொண்டாடும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர்...