​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விமரிசையாக நடைபெற்ற வீராம்பட்டினம் அம்மன் கோயில் ஆடித்தேரோட்டம்

புதுச்சேரியில் உள்ள வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் ஆடித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற அருள்மிக ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற...

’காங்கிரஸ் கட்சியின் அத்தியாயம் முடிந்துவிட்டது’ -ராஜேந்திர பாலாஜி

காங்கிரஸ் கட்சியின் அத்தியாயம் முடிந்துவிட்டது என்றும் இனி அந்த கட்சி நாட்டை ஆள முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர் திருவிழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். "கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்" என பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர விழா முக்கியமானதாகும். ஆண்டாள் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று பிறந்ததால் அன்றைய நாளில் ஆடிப்பூரத்...

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருவிழா தேரோட்டம் தொடங்கியது..

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருவிழா தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.  நெல்லையப்பர் கோவிலின் சிறப்பு மிக்க ஆனிப் பெருந்திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா

ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோவில். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் நடராஜருக்கு 6 மகா அபிஷேகம் நடப்பது வழக்கம். இதில் ஆனி...

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூலை 7-ந் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி காலையில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் நடராஜ ரத்தின...

மாரியம்மன் கோவில் வைகாசி விழாவின் நிறைவு நாள்

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி விழாவின் நிறைவுநாளான நேற்று ஆற்றில் கம்பம் விடுதல் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமையான இந்தக் கோவிலில் கடந்த 12ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்வுடன் வைகாசித் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பூச்சொரிதல், அக்னி...

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏழு முக்கிய சிவதலங்களில் ஒன்றான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவிலில், வைகாசி விசாகத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம்...

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழாவானது ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் 9ஆம் நாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர்...

தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

சித்திரைத் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை இன்று மேலராஜவீதியில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கிவைத்தனர். மங்கள...