​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேருந்தில் நண்பரை ஏற்ற மறுத்த நடத்துனரை தாக்கிய இளைஞர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், பேருந்தில் நண்பரை ஏற்ற மறுத்ததால் நடத்துனரையும், விசாரணையின் போது போக்குவரத்து காவலரையும் தாக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். திருத்தணியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர், தனது நண்பர் விஜய்யை ரேணிகுண்டாவிற்கு ஆந்திர மாநில அரசு பேருந்தில் ஏற்றி அனுப்ப பேருந்து...

உணவகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உணவகத்தில் வைத்து இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருத்தணி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள...

உணவகத்தில் வைத்து கொடூரக் கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று பட்டப்பகலில் உணவகம் ஒன்றில் வைத்து இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். திருத்தணி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள நீதிமன்றம் அருகில் நேற்று மாலை 4 பேர் கொண்ட கும்பல் ஒருவரை அரிவாள்...

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு..!

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம், புதுவையின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு ...

ரயில்வே சீசன் டிக்கெட் பயண தூரம் 160 கிலோ மீட்டராக அதிகரிப்பு

ரயில்வே சீசன் டிக்கட் பயண தூரம் 160 கிலோமீட்டர் தூரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் வேலை நிமித்தமாக வெளியூரிலிருந்து பயணிப்பவர்களுக்கு அது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 150 கிலோமீட்டர் தூரம் வரை இருந்த சீசன் டிக்கட் பயணதூரம் 10 கிலோ மீட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயின் இந்த...

திருத்தணி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நடைபெற்ற முதல் நாள் தெப்பத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக மாலையில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப் படிகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையை அடைந்தார். அங்கு...

தமிழகத்தில் முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை கோலாகலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன... சிவபெருமானின் அருளால் பிறந்த முருகனை, ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்ததாக புராணங்கள் கூறுகின்றன. அந்த ஆறு கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்கள் என்ற...

திருத்தணி மலை கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகப் பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடு அமைந்துள்ளது. இங்கு ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த...

ஆடிக்கிருத்திகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஆடிக்கிருத்திகையையொட்டி சென்ட்ரல் முதல் திருத்தணி வரை உள்ள ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையை அடுத்த திருத்தணியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை திருநாள் விமரிசையாக கொண்டாடப்படும்.  இந்நிலையில் இந்தாண்டு ஆடிக்கிருத்திகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை சென்ட்ரல்,...

திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக தொடங்கியது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுப்ரமணிசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக தொடங்கியது. திருச்செந்தூரில் போர் புரிந்த முருகப்பெருமான், கோபம் தணிந்து அமர்ந்த தலமாக திருத்தணி விளங்குகிறது. இங்கு ஆடிக்கிருத்திகை விழா மிகவும் விஷேசமாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது....