ONGC நிறுவனம் வெளியேறாவிட்டால் எந்திரங்கள் அடித்து நொறுக்கப்படும் – வைகோ ஆவேசம்

தமிழகத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறாவிட்டால், அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை அடித்து நொறுக்க இருப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள கற்சிலைகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கதிராமங்கலம் மக்களை யாரோ தூண்டிவிடுவதாக ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறிவருவதாக தெரிவித்துள்ளார்.

கதிராமங்கலத்தில் போராடுமாறு பொதுமக்களை தான் தூண்டிவிடுவதாக அதிகாரிகளுக்கு வைகோ பதில் அளித்துள்ளார். மேலும் தொடர்ந்து ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மக்களையும், இளைஞர்களையும் தூண்டிவிட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது போல், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை அடித்து நொறுக்க இளைஞர்களை திரட்ட இருப்பதாகவும் வைகோ ஆவேசத்துடன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன